Saturday, 16 April 2011

குடிமைப்பயிற்சி முகாம் இரண்டாம் நாள்

குடிமைப்பயிற்சி முகாமின் இரண்டாம் நாளான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நாள் இன்று (16-04-2011) காலை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. கல்லூரி முதல்வர் திரு.K.முத்துக்குமரன் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றினார்.


 விரிவுரையாளர் செல்வி.K.கலையரசி அவர்கள் வரவேற்புரையாற்றினார். 


முதல்வர் திரு.K.முத்துக்குமரன் அவர்கள் தலைமையுரையாற்றினார்.

திரு.M.அறிவழகன் மாவட்டச்சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர், முதன்மைக்கல்வி அலுவலகம், அரியலூர் அவர்கள் "சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய சிறப்புரை" ஆற்றினார்.



மதிய உணவு இடைவேளைக்குப்பின் கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.


தாளாளர்.திரு.Rm.B.சண்முகநாதன் அவர்கள் மரக்கன்று நடுகிறார்.


அரியலூர் மாவட்டச்சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திரு.M.அறிவழகன் அவர்கள் மரக்கன்று நடுகிறார்.


கல்லூரி விரிவுரையாளர் திரு.M.இராஜ்மோகன் அவர்கள் நன்றியுரை கூற நாட்டுப்பண்ணுடன் இன்றைய முகாம் நிறைவடைந்தது.

No comments:

Post a Comment