Friday, 22 April 2011

குடிமைப்பயிற்சி முகாம் ஐந்தாம் நாள்

குடிமைப்பயிற்சி முகாமின் ஐந்தாம் நாளான உடற்கல்வி நாள் இன்று (19-04-2011) காலை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.  தமிழ்நாடு வலைப்பந்துக்கழத்தின் நடுவர் மற்றும் தலைவர் திரு.T.பாண்டியன் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றினார். ஸ்ரீ சௌபாக்யா மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆசிரியர் திரு.A.சின்னப்பராஜ் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.தாளாளர்.திரு.Rm.B.சண்முகநாதன் அவர்கள் தலைமையுரையாற்றினார்.ஸ்ரீ சௌபாக்யா மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வர் திரு.S.கந்தவேல் அவர்கள் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு வலைப்பந்துக்கழத்தின் நடுவர் மற்றும் தலைவர் திரு.T.பாண்டியன் அவர்கள் உடல் நலக்கல்வி மற்றும் யோகா பயிற்சி பற்றி செய்முறையுடன் சிறப்புரையாற்றினார்.

பின் கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.பின் விவேகானந்தா மகளிர் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் செல்வி.N.கோப்பெருந்தேவி அவர்கள் மகளிருக்கான சிறப்பு உடற்பயிற்சியும், யோகாவும் பற்றிய சிறப்புரையாற்றினார்.

விரிவுரையாளர் திரு.V.சுவாமிநாதன் அவர்கள் ஐந்து நாட்கள் நடைபெற்ற குடிமைப்பயிற்சி முகாம் பற்றிய தொகுப்புரை வழங்கினார்.

கல்லூரி விரிவுரையாளர் திரு.M.இராஜ்மோகன் அவர்கள் நன்றியுரை கூற நாட்டுப்பண்ணுடன் இன்றைய முகாம் நிறைவடைந்தது.

No comments:

Post a Comment