குடிமைப்பயிற்சி முகாமின் நான்காம் நாளான விழிப்புணர்வு நாள் இன்று (18-04-2011) காலை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. நிர்வாக அலுவலர் திரு.K.V.தங்கராசு அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றினார்.விரிவுரையாளர் திரு.V.சுவாமிநாதன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.நிர்வாக அலுவலர் திரு.K.V.தங்கராசு அவர்கள் தலைமையுரையாற்றினார்.திரு.T.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மாணவர்களை நெறிப்படுத்துவதற்கான வழிமுறைப்பற்றிய சிறப்புரையாற்றினார்.பின் கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீ சௌபாக்யா மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வர் திரு.S.கந்தவேல் அவர்கள் நன்றியுரை கூற நாட்டுப்பண்ணுடன் இன்றைய முகாம் நிறைவடைந்தது.
No comments:
Post a Comment